ஆலையடிவேம்பு
கமு/ திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு விழா…

ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ விவேகானந்தா வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.K.தங்கவடிவேல் அவர்கள் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது.
குறித்த சித்திரைப் புத்தாண்டு விழாவில் அதிதிகள் என பலர் கலந்து நிகழ்வை சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கிடையில் தேசிக்காய் சமநிலையோட்டம், பலூன் உடைத்தல், கயிறுழுத்தல், சங்கீத கதிரை, யானைக்கு கண் வைத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் மாணவர்களை மகிழ்ச்சி அடையச்செய்யும் விதமாக இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் .