திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் விவசாய உற்பத்திக் கிராமங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட்ட குழுவினர் விஜயம்….

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் உணவு உற்பத்தி மாதிரி கிராமங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
இக் கள விஜயமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடியாறு மீள்குடியயேற்ற விவசாய உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை பார்வையிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்தும் உணவுப் பஞ்சத்தில் இருந்தும் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தற்போது தேசிய வேலைத்திட்டமாக உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்நிலையில் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு கிராம விவசாயிகளினால் பரிச்சார்தமாக பயிரிடப்பட்டுள்ள கரட் பீட்றூட் சிவப்பு கோ மற்றும் வெள்ளை கோவா உருளைக்கிழங்கு போன்ற மலைநாட்டு மரக்கறிப் பயிர்களின் அறுவடை நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபரினால் நிகழ்த்தப்பட்டது.
அந்த வகையில் ஒரே நபரினால் 50மேற்பட்ட பயிர்கள் பயிரிடப்பட்டடு அறுவடை மேற்கெள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே.எம்.ஏ.டக்ளஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.பி.அனீஸ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜேகே.யதுர்ஷன்