இலங்கை

அரசாங்கம் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது- அநுர

சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முனையுமானால் வடக்கு- கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால்,வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது.

அத்துடன் ஜனாதிபதியின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும் 2020 ஜனவரி 3 ஆம் திகதிக்கு  பின்னர் நாடாளுமன்றக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டாமென  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker