ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தினரால் சைவசமய பரீட்சையில் அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!!! பா.உ கோடீஸ்வரன் அவர்களும் பங்கேற்பு…

மாணவர்களுக்கு இந்து நெறி சார்ந்த ஒழுக்க விழுமிய பண்புகளை புகட்டும் பொருட்டு, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினால் வருடம் தோறும் வலைய மட்டத்தில் சைவசமய பாட பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 2018ம் ஆண்டு வலைய மட்டத்தில் நடைபெற்ற இந்து சைவசமய பாட பரீட்சையின் போது வலைய மட்டத்தில் அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஆலையடிவேம்பு இந்து மாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் அவர்களின் தலைமையின் கீழ் அம் மன்றத்தின் உறுப்பினர்களினால் இன்று காலை 8.30 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் மற்றும் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் k. சோபிதா, கல்முனை வலைய ஆசிரியர் ஆலோசகர் k. லக்குணம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆலயங்களின் அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமய ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர்.
இன் நிகழ்வின் போது சைவ சமய பாட பரீட்சையின் அதிவிசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அத்துடன் அதிதிகளினால் விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டது.அத்துடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் கலைப்பிரிவில் 2018 ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற மாணவிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.