ஆலையடிவேம்பு
முதியோர்களுக்கான சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்படும் நடமாடும் சேவை எதிர்வரும் (28) ஆம் திகதி …

சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்பட இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை (28/09/2019) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து கிராமசேவை அலுவலர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் தேவைகளையும், குறைகளையும், சுகயீனங்களையும் எதிர்வரும் 20 ம் திகதிக்கு முன்னர் தங்கள் பிரிவு சிரேஷ்ட பிரஜைகள் (முதியோர்கள்) சங்க தலைவர் செயலாளர்களுக்கு எழுத்து மூலமாக விண்ணப்பங்களை சமர்பித்து உரிய நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன்களை பெறலாம்.
தங்கள் விண்ணப்பங்களாவன
- முதியோர்களுக்கன அடையாள அட்டைகள்
- முதியொர்களுக்கான வைத்திய சேவைகள். ( கண்வில்லை, மூக்குகண்ணாடி, வாதம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள்)
- எழுந்து நடமாடமுடியாதவர்களுக்கான சக்கர நாட்காலி வண்டிகள், ஊன்றுகோல் மற்றும் பல சேவைகளும் இடம்பெறும்.