தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டனவா?

கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் போது மருந்து உற்பத்தியாளர்கள் வழங்கிய பரிந்துரைகளை செயற்படுத்தும் போது வீண்விரயம் ஏற்பட்டால் அது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என விசேட வைத்தியர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்;.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசி கொள்கலன்கள் மூலம் 10 பேருக்கு மாத்திரமே அவற்றை செலுத்துமாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும் 11 கொள்கலன்களில் உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்த இயலுமை உள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ரவி குமுதேஸ் தெரிவித்தார்.
´ஒருவருக்கு செலுத்த கூடிய பெறுமதியான தடுப்பூசியை விரயமாக்கினால், சுற்றறிக்கைக்கு அமைய அதனை பாவிக்க முடியாவிடின் அது பாரிய குற்றமாகும். இன்று இதுவரை 180,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மொத்தமாக 35,000 தடுப்பூசிகள் விரயமாகியிருக்கலாம் என எண்ணுகின்றோம். இது மோசடியாக கூட இருக்கலாம்.´ என ரவி குமுதேஸ் தெரிவித்தார்.
எனினும் இதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விசேட வைத்தியர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்;.
´இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதாவது 10 பேருக்கு அல்லது 11 பேருக்கு வழங்க முடியும் என்பது ஒவ்வொருவரினதும் கருத்தாகும். அந்த நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அமையவே செயற்படுகின்றோம். மேலதிகமான தடுப்பூசிகளை வீண் விரயமாக்குவது தவறாகும். அது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும்´ என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், நிபந்தனைகளுக்கு அப்பால் சென்று தனியார்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ரவி குமுதேஸ் இதன்போது தெரிவித்தார்.