இலங்கை
இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பதிவு செய்யப்படுவர் : அரசாங்கம்!!

சமூக ஊடகப் பயனர்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் கண்டியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களையும் பதிவிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதனை தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்பாடலின் மிகவும் வலுவான ஓர் ஊடகமான சமூக வலையமைப்புக்களை கிரமப்படுத்துவது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.