ஆலையடிவேம்பு
வீட்டு சுற்றுப்புறசூழல் சோதனை: ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

ஆண்டுக்கான பருவமழை தற்போது ஆரம்பித்திருப்பதால், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாய நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாட்டினை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் (11) அக்கரைப்பற்று 7/3 அக்கரைப்பற்று 7/4 பகுதிகளில் வீடு வீடாக சென்று வீட்டின் சுற்றுப்புறசூழலில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய நிலை காணப்படுகிறதா என்பது தொடர்பாக பார்வையிட்டதுடன் வீட்டில் உரிமையாளர்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் சுகாதார பரிசோதகர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கலாச்சார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



