இலங்கை
Trending

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT வரி விதிப்பு

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் 2025 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்கப்படும், மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை 2025 ஜூலை மாதம் முதலாம் திகதியன்று 2443/30 இலக்க விசேட வர்த்தமானி ஊடாக வெளியிட்டிருந்தது.
இலங்கையில் நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.
கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் VAT-க்கு பதிவு செய்வது கட்டாயமாகும்.
பின்வரும் துறைகள் இந்த டிஜிட்டல் சேவைகள் பிரிவில் அடங்குகின்றன.
E-commerce Services
Cloud Computing
Software as a service (SaaS)
Cybersecurity Services
Digital Marketing & Advertising
IT support & Managed Services
Streaming Services
Fin Tech
Subscription & Membership Website
E-commerce Platforms
Social Media Platforms
On Demand Service Platforms
Content Sharing Platforms
Cloud Collaboration Platforms
Market Place Platforms
Gaming Platforms
Blockchain & NFT Platforms
Apps for hotel bookings and ticket reservations
அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்குவது, 2025 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 18% VAT விகிதத்திற்கு உட்பட்டதாகும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker