இந்திய அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், அங்கிருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, தங்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக் கெட் சபை தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்தப் பயங்கரவாத இயக்கத்தின் பெயரும் இல்லாமல் இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அந்த மின்னஞ்சலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் சபைக்கும் அங்கிருந்து, அந்த மின்னஞ்சல் பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.