யானைகள் இரண்டின் வருகையால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய குடமுழுக்கு பெருவிழா…

– மகாதேவன் கிரிசாந் –
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம் எதிர்வரும் 31.03.2021 காலை 10.00 மணி முதல் 01.04.2021 மதியம் 02.00 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
அதனைத்தொடர்ந்து குடமுழுக்கு நிகழ்வு (02.04.2021) ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி காலை 06.11 மணிமுதல் 07.41 வரை உள்ள காலத்தில் 17 குண்ட மகா யாக கும்பாபிஷேகம் காண இருக்கிறது.
குறித்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் முகமாக யானைகள் இரண்டு இன்றைய தினம் ஆலய நிர்வாகத்தினரினால் வரவழைக்கப்பட்டு இருப்பதனால் ஆலய குடமுழுக்கு நிகழ்வு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் ஆலய தலைவர் மு.வடிவேல் மற்றும் ஆலயக்கும்பாபிசேக குழுத் தலைவர் எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ள கும்பாபிசேக குடமுழுக்கினை தத்புருஷ சிவாச்சாரியார் பிரதிஷ்டா கலாநிதி சண்முகவசந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.