ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சிறப்பான முறையில் இடம்பெற்ற ஒளிவிழா…

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (14/12/2023) காலை 10:30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.k.ஜெயந்தன் தலைமையில் ஒளி விழாவானது பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பானதாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் தேவாலயத்தின் பங்குத்தந்தை REV. FR. Antony Delima அவர்களும் அக்கரைப்பற்று தேவாலயத்தின் பங்குத்தந்தை REV. FR. Jeriston Vincent அவர்களும் போதகர்களான REV. PAS. K.Ravikaran,REV. Donetta Michael, REV. SR. Premala A. C ஆகியோரும் விசேட அதிதியாக பாடசாலையின் பிரதி அதிபர் திரு.சி.மதியழகன்,ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு. K. யோகராஜ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. S. அகிலன் மேலும் பாடசாலையின் ஆரியர்கள் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.