தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சதவீத அடிப்படையில் அவுஸ்ரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஆனால் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்ரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொடர்கள் இரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் இந்த புதிய திட்டத்தை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே எஞ்சியுள்ள போட்டிகளில் கட்டாய வெற்றிகளை நோக்கி அணிகள் நகரவேண்டியுள்ளன.
முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 9 அணிகள் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.