சம்பிக்க கைது சிறப்புரிமை மீறல்! – பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் எச்சரிக்கை – ஆஜராகி விளக்கமளிக்குமாறும் அழைப்பு

முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளை வரவழைத்து நாடாளுமன்ற உறுப்பினரின் கைது தொடர்பில் சபாநாயகர் எச்சரிக்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இந்தக் கைது தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணையகத்தின் நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பது என முடிவு செய்தனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறி சம்பிக்க கைதுசெய்யப்பட்டார் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டனர் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
				 
					


