வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அவர்களின் நாட்டின் சாரதி அனுமதி பத்திரம் உள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்தவொரு வாகனத்தையும் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர்,
தங்கள் நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் நாட்டுக்கு வருபவர்களும் இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேநேரம், தேவையான சாரதி அனுதிப் பத்திரம் அல்லது சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இலங்கையில் வாகனங்களை செலுத்துவதை சுற்றுலா பயணிகள் தவிரக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தவுடன் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு வசதியாக இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வசதிகளை அறிமுகப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.