இலங்கை
மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்!

நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அத்தோடு சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தனது கோரிக்கை தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன்போது ரணில் விக்ரமசிங்க பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.