
வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று (22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, உள்ளூராட்சி மன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, வெலிகம பிரதேச சபைத் தலைவரை சபைக்குள் இருந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர், சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் மிதிகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
அவர், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.