இலங்கை
வடக்கு கடலினுள் பேரூந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க டக்ளஸ் முயற்சி

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு,