இலங்கை
Trending

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் முந்தைய பதவிகள்

01. எஸ்.எஸ்.கே. விதான – மாவட்ட நீதிபதி
02. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க – மாவட்ட நீதிபதி
03. ஏ.எம்.எம். ரியால் -மாவட்ட நீதிபதி
04. டீ.பீ. முதுங்கொடுவ, – மாவட்ட நீதிபதி
05. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் – மேலதிக மாவட்ட நீதிபதி
06. ஜே. கஜனிதீபாலன் மாவட்ட நீதிபதி
07. டி.எம்.டி.சி. பண்டார – நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்
08. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
09. டி.எம்.ஏ. செனவிரத்ன – மேலதிக மாவட்ட நீதிபதி
10. ஏ.ஏ. ஆனந்தராஜா – நீதவான்
11. ஜி.என். பெரேரா – மாவட்ட நீதிபதி
12. ஏ. ஜுடேசன்- மாவட்ட நீதிபதி
13. டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க – மாவட்ட நீதிபதி
14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய – மாவட்ட நீதிபதி
15. கே.டி.என்.வி. லங்காபுர,- நீதவான்
16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க – மாவட்ட நீதிபதி
17. எம்.ஐ.எம். ரிஸ்வி – மாவட்ட நீதிபதி
18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா – சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker