
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
இதன்போது பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அவர் இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தை அடுத்தும் நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளினாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.