அக்கரைப்பற்று பிரதேச மக்களின் பங்களிப்பில் சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திர பௌர்ணமி 02ஆம் நாள் அலங்காரத் திருவிழா…..

ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானியாக்கி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திர பௌர்ணமி அலங்காரத் திருவிழா (10.04.2022) திகதியன்று வாஸ்து சாந்தி நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்றய தினம் (12.04.2022) செவ்வாய்க்கிழமை 02ஆம் நாள் அலங்காரத் திருவிழா அக்கரைப்பற்று மக்களின் பங்களிப்புடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந் வழிபாட்டில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்று கலந்துகொண்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்களும் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அலங்காரத் திருவிழா பூசை நிகழ்வுகள் சிவாஸ்ரீ குமுதேஷ்வர சர்மா, சிவஸ்ரீ சிவகுமார சர்மா குருமார்களால் பூசை உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.
02ஆம் நாள் அலங்காரத் திருவிழா பூசை நிகழ்வுகளில் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பினை வழங்கியதுடன், ஆலய சுற்றுச்சுழல் துப்பரவு செய்யும் சிரமதானப்பணி செயற்பாடுகள் என்பனவும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.