அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் பெரியதம்பி செல்வபதி

 

மீனோடைக்கட்டை பிறப்பிடமாகவும் கலாசார மண்டப வீதி சின்னக்குளம் அக்கரைப்பற்று-7/4 வசிப்பிடமாகவும் கொண்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும் கோம்பக்கரச்சி விவசாய கண்டத்தின் முன்னாள் விவசாய பிரதிநிதியுமான பெரியதம்பி செல்வபதி அவர்கள் நேற்றைய தினம் (28) இறைபதமடைந்தார்.

அன்னார் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் செயலாளர் சாந்தன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பிரிவிற்கான இணைப்பாளருமான யோகநாயகம், சுந்தரமூர்த்தி , விஜயலெட்சுமி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் சேனாதிபதி , துளசிபதி , செந்தில்ராஜா மற்றும் உதயமலர் கங்கேஸ்வரி வாணி அஜேந்தினி ஆகியோரின் தந்தையும் ஆவர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மேலும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இறுதிக்கிரியைகள் 2025.10.29 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker