
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (20) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் கடந்த 09 ஆம் திகதி, தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு போதைப்பொருள் சோதனை செய்வது போன்று கேகாலை – திக்ஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 17,500,000 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவர் அம்பாறையிலும், ஒருவர் எம்பிலிப்பிட்டியிலும், மற்றுமொருவர் கேகாலையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.