விளையாட்டு
2020க்கான IPL கிரிக்கெட் போட்டித் தொடருக்கான திகதி அறிவிப்பு.

இந்தியாவில் வருடம் தோறும் உள்ளூர் T-20 கிரிக்கெட் தொடரான IPL கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளுர் கிரிக்கெட் தொடரான IPL உலக நாடுகள் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் பெரியளவில் ஜொலித்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு பெரிய விருந்தாகவே அமைந்து வருகிறது.
இந்நிலையில் 13வது IPL T- 20 கிரிக்கெட் போட்டி தொடர் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி முதல் May 24ம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கவிருப்பதை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
IPL போட்டி வழக்கமாக இரவு ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கும். அதனை 30 நிமிடம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கலாமா? என்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இரவு போட்டிகள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்குவது குறித்து விவாதித்தனர். அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த வருடத்தை போல் இவ் முறையும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த முறை 5 நாட்களுக்கு மட்டுமே 2 போட்டிகள் அரங்கேறுகிறது. அவை முறையே மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். இறுதிப்போட்டி முன்னதாக உலகின் மிகப்பெரிய மைதானமாக அஹமதாபாத்தில் தயாராகும் மைதானத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது பெறலர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் தாக்கி தலையில் அதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கும் முறை மற்றும் நோ-வோலை போட்டி நடுவருக்கு பதிலாக 3வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறை ஆகியவை இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. IPL போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நல நிதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.