பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் அக்கரைப்பற்று, இறக்காமம், நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய பொலிஸ்பிரிவுகளின் வீதி போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வு அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி.நுவான் தந்தநாராயண தலைமையில் நேற்றைய தினம் (07) செவ்வாய்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது வீதி போக்குவரத்து தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது, அதனில் முக்கியமாக பிரதேசங்களில் காணப்படும் வீதிகளின் குறைபாடுகள், பெண்கள் உந்துருளிகளில் ஒரு பக்கமாக இருந்து பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள், பாதசாரி கடவையில் வாகன சாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றிய தெளிவூட்டல், போக்குவரத்து ஒழுங்கில் பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் என பல விடயங்கள் ஆராயப்பட்டதுடன்.
கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு போக்குவரத்து விதிமீறல்கள் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கடந்த காலங்களில் பல் வேறு பகுதிகளிலும் இடம் பெற்ற வீதி விபத்துக்களின் விதிமுறை மீறல்கள் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



