பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் கோரிக்கைக்கு அமைவாக பாதசாரி கடவை அமைக்கும் வேலை முன்னெடுப்பு.

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் பா.கதிகரன் (சீனு) பிரதேச சபை அமர்வில் முன்வைத்த பிரேரணையின் அக்கரைப்பற்று அன்னை சாராத கலவன் பாடசாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அருகாமையில் மாணவர்கள் பாதையை மறுபுறம் கடந்து செல்வதற்கு பாதசாரி கடவைகள் (Pedestrian Crossings) இல்லை என்பதை சுட்டிக்காட்டி.
குறித்த மூன்று இடங்களிலும் மாணவர்கள் கடந்து செல்வதற்கு பாதசாரி கடவை அமைக்கப்பட வேண்டும் என பிரேரணை சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த பிரேரணை தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த வீதிகளுக்கு பொறுப்பான வீதி அதிகார திணைக்களத்திடம் தவிசாளர் ஆர்.தர்மதாச அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்றைய தினம் (07) குறித்த மூன்று இடங்களிலும் பாதசாரி கடவை அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகிறது.
இதனை தவிசாளர் ஆர்.தர்மதாச மற்றும் சபை உறுப்பினர் பா.கதிகரன் ஆகியவர்கள் பார்வையிட்டு இருந்தனர்.



