திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில்…

திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் 2008/04 சுற்ரு நிறுவத்தின் கீழ் அரசகாணிகளில் குடியிருந்து பயிர் செய்யும் மக்களுக்கு ஆவணம் வழங்கு வதற்கான ஆரம்ப கட்ட விசாரனையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் விநாயகபுரம் 03 பகுதியில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் விநாயகபுரம் 03 அரசகாணிகளில் குடியிருந்து பயிர் செய்து வரும் தெரிவு செய்யப்பட்ட அண்ணளவாக 40க்கும் அதிகமான பேருக்கு இவ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் காணி உத்தியோகத்தர்களாகிய திரு.P.கோவிந்தசாமி (LO) திருமதி.T.லோஜினி,கிராம நிலாதாரி ,திரூக்கோவில் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
ஜேகே.யதுர்ஷன்