இலங்கை
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு அக்கரைப்பற்று தமிழ் இலக்கிய பேரவை வாழ்த்தி கௌரவிப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக ஆ.தர்மதாச (தொண்டமான்) கடந்த 30ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்ற திறந்தவெளி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அன்றைய தினமே அக்கரைப்பற்று தமிழ் இலக்கிய பேரவையின் நிர்வாகத்தினர் தவிசாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து தவிசாளர் ஆ.தர்மதாச அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், உப தவிசாளர் க.ரகுபதி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு கிளையின் பொறுப்பாளர் ஆர்.ஜெகநாதன் அவர்களும் பங்குகொண்டிருந்தனர்.