பாடசாலைகளுக்கான மைதானங்களுக்கான காணி அனுமதி பத்திரங்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைப்பு!

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 4 பாடசாலைகளுக்கு மைதானங்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் அம்பாறை மாவட்ட செயலக செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வானது திருக்கோவில் வலையக்கல்வி பணிப்பாளர் திரு.இரா.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம அவர்களும் விசேட அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் வலய உடல் கல்வி பணி்ப்பாளர் திரு.கங்காதரன் திருக்கோவில் வலையக்கல்வி அலுவலக ஆசிரியர் ஆலோசகர் திரு. ஷம்சன் , பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.உதயகுமார் ,திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு ரவீந்திரன் மற்றும் தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திரு. தர்மசீலன் தாண்டியடி திருபதி வித்தியாலய அதிபர் V.உதயகுமார் திருக்கோவில் கமு/திகோ/ விஸ்வதுளசி வித்தியாலய அதிபர் திரு.வுர்னோ தம்பிலுவில் மத்திய மகாவித்தியால அதிபர் அம்மனி கோமலாதேவி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி திட்டமிடல் உத்தியோத்தர் SP.புண்ணியசீலன் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்.