இலங்கை
Trending
பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஏ. ஆதம்பாவா எம்.பி.யும் நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக் குழுவின் தவிசாளராக சன்மிலி குணசிங்க தலைமையில் அபூபக்கர் ஆதம்பாவா, சஞ்சீவ ராசிங்க, சமந்த ராமசிங்க ஆகியோர் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நாட்டுக்கும், எமது பிரதேசத்துக்கும் மற்றும் கல்விசார் சமூகத்திற்கும் சேவையாற்ற உடல், உள ரீதியாக ஆரோக்கியத்தை வழங்க தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட பொதுமக்கள் இறைவனிடம் பிரார்த்தித்து, தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.