ஆலையடிவேம்பு
பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற கேதார கௌரி விரத இறுதிநாள் காப்புகட்டும் நிகழ்வு…..

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வாக இன்று (21) காப்புகட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை நினைத்து இந்த விரததத்தினை அடியார்கள் அனுஸ்டித்துவந்தனர்.
தினமும் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டுவந்த அடியார்கள் இன்று காப்பினைக்கட்டி தமது விரதத்தினை நிறைவுசெய்தனர்.
அக்கரைப்பற்று, பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
புகைப்படம் : கஜிதன்