நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: பாக். அணியில் பாபர் அசாம்- இமாம் உல் ஹக் விலகல்!

நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக் ஆகியோர் விலகியுள்ளனர்.
பாபர் இல்லாத நிலையில் முகமது ரிஸ்வான் அணியின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் பாகிஸ்தானின் 33ஆவது அணித்தலைவரானார்.
பாபர் அசாமுக்கு வலது கட்டைவிரல் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இமாம் உல் ஹக்குக்கு இடது கட்டைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவர்கள் இருவரும் ஜனவரி 3ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17பேர் கொண்ட டெஸ்ட் அணியில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்த சேர்ந்த இம்ரான் பட் என்ற இளம் வீரரையும் தேர்வுக் குழு தெரிவுசெய்துள்ளது.
இந்த அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
முகமது ரிஸ்வான் (முதலாவது டெஸ்ட் அணித்தலைவர்), அபிட் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஃபவாட் ஆலம், ஹரிஸ் சோஹைல், இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மவுணட் மவுன்கானுயில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.