நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ மருந்துகளின் ஒரு தொகுதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்று நோயை எதிர்க்கும் சக்தி ஆயுர்;வேத உற்பத்தி மருந்துகளில் அதிகமாக இருப்பதாக இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதுடன் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.
இலங்கை நாட்டிலும் ஆயுர்வேத உற்பத்திகளையும் மருந்தினையும் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் அமைந்துள்ளது.
இதற்கமைவாக ‘ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ எனும் தொனிபொருளுக்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களிலும் அரச அலுவலகங்களிலும் ஆயுர்வேத உற்பத்திகளை பயன்படுத்தவதற்கான ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக ஆயுர்வேத மருந்துகளின் ஒரு தொகுதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆயுள்வேத மத்திய நிலைய வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஏ.நபீல் மற்றும் ஆலையடிவேம்பு திருக்கோவில் அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்திய சாலைகளின் வைத்தியர்கள் ரி.குவிதாகரன், ஜ.எல்.அப்துல் கை, எம்.பி.ரஜீஸ் மற்றும் பிரதேச செயலக கணக்காளர் கே.கேசகன், நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா, தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த வைத்தியர்கள் இன்றைய சூழலில் ஆயுர்வேத மருந்தினையும் முறைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தினர்.
இதேநேரம் குறித்த ஆயுர்வேத மருந்து தொகுதியை வழங்கி வைத்த ஆயுர்வேத வைத்திய பிரிவினருக்கு பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்