ஆலையடிவேம்பு
மொட்டயாமலை பகுதியில் தீயில் எரிந்து சேதமாகிய நீர் குழாய்கள்!

ஆலையடிவேம்பு பிரதேச, சாகாமம் வீதி மொட்டயாமலையை அண்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள்(PE pipe) இன்று (01/08) தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
அருகில் காணப்படும் வயல் பகுதியில் வைக்கோலுக்கு வைத்த தீ வீதியில் இருந்த நீர் குழாயில் தாவி எரிந்திருக்கலாம் என பிரதேச மக்களால் ஊகிக்கப்படுகிறது.
சம்பவமானது இன்று நண்பகல் வேளையில் இடம்பெற்றதுடன் இதனைக் கேள்வியுற்ற முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் T.நவநீதராஜ் அவர்கள் இது தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் அவர்களுக்கு அறிவித்து பிரதேச சபையினர் பங்களிப்புடன் தீ அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.