இலங்கைபிரதான செய்திகள்
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது.
பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர்.அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



