இலங்கை
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்.

நாடளாவிய ரீதியில் இன்றிரவு 11 மணி முதல் நாளை (07) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
அரச மற்றும் தனியார் துறையினர் தமது அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, கொரோனா ஒழிப்பிற்கான சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.