இலங்கை
மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்தவும்- இராணுவத்தினர்

(வி.சுகிர்தகுமார்)
இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்துமாறு இராணுவத்தினர் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையினை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மதஸ்தலங்களின் நிருவாகத்தினரை அறிவுறுத்துமாறு அக்கரைப்பற்று இராணுவ முகாம் 241ஆம் படைப்பரிவில் கடமையாற்றும் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் சந்திம ஜயசேன கேட்டுக்கொண்டார்.
மேலும் குறித்த அறிவுறுத்தலினை கடைப்பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மதஸ்தலங்களின் நிருவாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.