நம் தேசத்தில் கரங்கள் அமைப்பினால் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகளை வழங்கி வைக்கப்பட்டது.

வி.சுகிர்தகுமார்
கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முயற்சியில் கல்விச்சமூகம் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்ட நம் தேசத்தில் கரங்கள் அமைப்பானது மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக பல கல்வி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று அமைப்பின் பணிப்பாளர் க. பிரதீப் ஆலோசனையின் கீழ் அமைப்பின் தலைவர் ப. பாலகிருஸ்ணன் தலைமையில் ஆலயடிவேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கண்ணகிபுரம் மகா வித்தியாலயம், பனங்காடு பாசுதேசுவரர் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் ச. சஜீவனினால் தயாரிக்கப்பட்ட கணித பாட செயலட்டையும், ஆசிரியர் ப.பாலகிருஸ்ணனினால் தயாரிக்கப்பட்ட வரலாறு பாட செயலட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் க.கிருஸ்ணமூர்த்தி மற்றும் இளம் விஞ்ஞானி த.வினோஜ்குமார் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் கொரோனா விடுமுறை காலத்தில் மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயம், வீரமுனை ஆர்.கே.எம்.வித்தியாலயம், காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு ஆர்.கே.எம். பெண்கள் பாடசாலை, கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம், நற்பட்டிமுனை சிவ சக்தி வித்தியாலயம், பாண்டிருப்பு மகா வித்தியாலயம், நாவிதன்வெளி விவேகானந்த மகா வித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம், நாவிதன்வெளி கலைமகள் வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்ட எருவில் மற்றும் கிரான்குளம் பிரதேச பாடசலைகள் உட்பட 18 பாடசாலைகளுக்கு கணித, வரலாறு பாட செயலட்டைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.