இலங்கை

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில்: அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் இதுவரை 877 தொற்றாளர்கள்

வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில் பேலியகொட சந்தை கொத்தனிக்கு பின்னராக ஏற்பட்ட தொற்று 1500 யை அன்மித்துள்ளதுடன் மரணங்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக கொரோனா தொற்று 1516 ஆகவும் பேலியகொட சந்தை கொத்தனிக்கு பின்னராக ஏற்பட்ட தொற்று 1493 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கல்முனை பிராந்தியத்தில் அதிகூடிய 915 தொற்றாளர்களும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் 332 தொற்றாளர்களும் திருகோணமலை பிராந்தியத்தில் 193 தொற்றாளர்களும் அம்பாரை பிராந்தியத்தில் 53 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம் அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் இதுவரை 877 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளப்படுத்தப்படாத நிலையில் 41 நாட்களின் பின்னர் சகல பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுவருவதுடன் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 44337 பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாக மாகாண சுகாதார திணைக்கள கொவிட் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளன.

இதற்கமைவாக கல்முனை பிராந்தியத்தில் 21243 பரிசோதனைகளும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் 13176 பரிசோதனைகளும் திருகோணமலை பிராந்தியத்தில் 6495 பரிசோதனைகளும் அம்பாரை பிராந்தியத்தில் 3423 பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 தனிமைப்படுத்தும் நிலையங்களிலும் 2806 தொயங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் மாகாண சுகாதார திணைக்கள கொவிட் தகவலகள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையிலும் கல்முனை பிராந்தியத்தில் இரவு பகல் பாராது சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் 2266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 525 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன் 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக வேறு நிலை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker