இலங்கைபிரதான செய்திகள்
Trending

தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை

நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது. இது மின்சார தேவையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 642 kWh ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 693 kWh ஆகவும் காணப்பட்டுள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நவீன காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மின்விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல மின் உபகரணங்கள் உள்ளன.

மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். கல்வி நடவடிக்கைகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், சுகாதாரத் துறையிலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தை பயன்படுத்தும் அளவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இது அரசாங்கத்தின் நிலையான எரிசக்தி மாற்றத்திற்கான உறுதிப்பாட்டையும் மேம்படுத்துகின்றது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker