
2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால் (Non – Resident) டிஜிட்டல் சேவை வழங்கல்களுக்கு பெறுமதிசேர் வரி சேர்க்கப்பட்டுள்ளது.
ஆயினும், டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதிசேர் வரி அறிவிடும் போது அதற்கு இயங்கியொழுகுவதற்கு தயாராவதற்கு மேலதிக காலத்தை வழங்குமாறு நடைமுறைச் சாத்தியமான பல காரணங்கள் குறிப்பிடப்பட்டு வதிவிடமற்ற சேவை வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2025.10.01 ஆம் திகதிக்குப் பதிலாக குறித்த வரி நடைமுறையை 2026.04.01 ஆகத் திருத்தம் செய்வதற்காக, அதற்கு திருத்தப்பட்ட ஏற்பாடுகள் தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டு சேர்பெறுமதி சட்டத்தைத் திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற சட்டமூலத்தில் பெறுமதிசேர் வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான வரைபை உட்சேர்ப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.