இலங்கை
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் போராட்டம்

கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்கள் சிலர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேலியகொட புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் தமக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இடவசதி, போதுமானதாக இல்லை என தெரிவித்தே அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த போதிலும் இதுவரை எந்தவொரு பதிலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கான தீர்வொன்றை எதிர்பார்த்தே, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிடுகின்றனர்.