சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு உதவிகளை வழங்கியவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

அம்பாறை மாவட்ட சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு முன்வந்து உழவு இயந்திரங்கள், வாகனங்கள், அமைப்பு சீருடை, நீர்த்தாங்கிகள் வழங்கியவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பு காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்றது.
மேலும் குறித்த நிகழ்வில் சேவை செய்த அமைப்பு தொண்டர்கள், உதவிகள் செய்து வரும் நபர்களின் சேவையும் பாராட்டி கௌரவித்ததுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வுகள் சிவ தொண்டர் அமைப்பின் நிர்வாகத்தினார் தலைமையிலும் உறுப்பினர்கள் பங்களிப்புடனும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் என். கந்தசாமி, கிராம சேவகர் ரதிஸ்வரி சுதாகரன் மற்றும் திருநாவுக்கரசர் நாயனார் குருகுல பணிப்பாளரும் சிவ தொண்டர் அமைப்பின் ஆரம்ப கால நிருவகருமான கன இராஐரெட்ணம் ஆகியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.