ஆலையடிவேம்பு கோட்டத்தில் 77 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: இருவர் வைத்தியத்துறைக்கும் மூவர் சட்டத்துறைக்கும் தெரிவு…..

வெளியான G.C.E.A/L 2023 (2024) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து இவ்வருடம் இருவர் வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்.
அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து இருவரும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலிருந்து சட்டத்துறைக்கு ஒருவருமாக ஆலையடிவேம்பு கோட்டத்தில் மொத்தமாக 77 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில்,
அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட இருவர் உட்பட 43 மாணவர்களும்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் இருந்து சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட இருவர் உட்பட 22 மாணவர்களும்.
கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இருந்து சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு மாணவி உட்பட 04 மாணவர்களும்.
கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தில் இருந்து 04 மாணவர்களும்.
தம்பட்டை மகாவித்தியாலயத்திலிருந்து 04 மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
மேலும் வலய மட்டத்தில் வர்த்தக பிரிவில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையும் கலைப்பிரிவில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ் மிசன் மகாவித்தியாலயமும் அதி கூடிய சித்தியினை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட உயர்தர பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் 100 சதவீத வளர்ச்சியினை எட்டிப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.