இலங்கை

நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.

யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.

கடந்த 30.11.2024 இரவு 08.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வெள்ள அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரவலாக தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி குடிபோதையில் அந்த சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை அந்த சமூக செயற்பாட்டாளர் என்று நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார் அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து அவர்களின் முறைப்பாட்டின் பெயரில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker