இலங்கை
சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றல்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 23 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 02 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு இலட்சத்து 53 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 07 கிராமுக்கும் அதிகமாக ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.