ஆலையடிவேம்பு

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புள்ள கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (09) காலை பாடசாலையின் அதிபர் த.இராசநாதன் தலைமையில் நடைபெற்றது.

இப் பாடசாலையில் இருந்து 16 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றிருப்பதுடன் கலைப்பிரிவில் 6 பேர் 3A சித்தி பெற்றிருக்கிறார்கள் மேலும் 33 பேர்களில் 28 பேர் 3 பாடங்களிலும் சித்தி பெற்று (85%) பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவ் நிகழ்வில் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான சோ.செல்வம் மற்றும் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதாகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க (SDC) உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.

மேலும் இதன் போது மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker