ஆலையடிவேம்பு
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் மாணவர்களுக்கு அரச கால்நடை வைத்திய காரியாலயத்தினால் பசும்பால் வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் மாணவர்களுக்கு இன்றைய தினம் (11) ஆலையடிவேம்பு அரச கால்நடை வைத்திய காரியாலயத்தினால் PSDC திட்டத்தின் கீழ் தூய பசும்பால் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு பசும்பாலின் மகத்துவம் பற்றியும் விளக்கப்பட்டது.
தூய பசும்பாலின் நுகர்வை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கால்நடை வைத்திய அதிகாரிகளான Dr.A.H.M கபில், Dr.S.மௌனிக்கா சுகாதார பரிசோதகர்களான சுதாகரன், மோகன் இவர்களுடன் கால்நடை வைத்திய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.