இலங்கை
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி


மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



