இலங்கை
கொரோனா அச்சம்- மஹரகமவில்1600 குடும்பங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

மஹரகமவில் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மஹரகம நகரசபைக்கு உட்பட்ட மிரிஹானை- பிரகதிபுர, வெல்சிரிபுர மற்றும் ராகுலாபுர பகுதிகளில் கிட்டத்தட்ட 1600 குடும்பங்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 12 மீன் வர்த்தகர்கள், இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மஹரகம நகராட்சி கவுன்சிலர் ஞானசிறி தயானந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியை முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.